“When our people grow, our town grows. Even if we live far away, our heart is always in our home town Adirampattinam”
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
நீங்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அதிராம்பட்டினம், சென்னை, துபாய், அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தாலும், உங்கள் மனசு இன்னும் நம்ம ஊருடன்தான் இணைந்திருக்கிறதே இல்லையா?
- உங்களுக்கு நம்ம மக்களுடன் connect ஆகணும் என்று தோன்றாதா?
- உங்கள் business-ஐ நம்ம ஊருக்காரர்கள் தெரிந்து கொள்ளணும் என்று நினைக்காதா?
- உங்கள் பெயர் நம்ம Adirampattinam community-ல இருக்கணும் என்று ஆசைப்படாதா?
அதற்காகத்தான் Adirai.in உருவாக்கப்பட்டது.
இது ஒரு சாதாரண website இல்லை. இது நம்ம Adirampattinam community platform. நம்ம மக்களால் உருவாக்கப்பட்டு, முழுவதும் Adirampattinam மக்களுக்காக develop செய்யப்பட்ட ஒரு trusted online space.
நாம் தளத்தை வேறுபடுத்துவது என்ன? What Makes Our Platform Unique?
உலகளாவிய இணைப்பு, உள்ளூர் அடையாளம். Global Connection, Local Identity.
அதிராம்பட்டினத்தில் ஒரு சேவையை தேடினாலும், அல்லது UAE, USA, கனடா போன்ற நாடுகளில் செயல்படும் ஒரு அதிரையனின் வியாபாரத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினாலும் Adirai.in எல்லைகளை தாண்டி மக்களை இணைக்கிறது.
இங்கே நீங்கள் என்ன செய்யலாம் தெரியுமா?
1. Business Directory-ல் பதிவு செய்யலாம்
உங்களுக்கு business இருந்தாலும், உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு business இருந்தாலும் — Business Directory-ல் பதிவு செய்யலாம். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அங்குள்ள business-ஐ இங்கே பதிவு செய்யலாம்.
2. Professional Directory-ல் பதிவு செய்யலாம்
நீங்கள் ஒரு professional Doctor, Engineer, Technician, Carpenter, Electrician, Plumber, Lawyer, Teacher, Architect மற்றும் பல என்றால் Professional Directory-ல் பதிவு செய்யலாம். உங்கள் skill, experience, service area, contact details சேர்த்து பதிவு செய்யலாம். நீங்கள் எந்த country-ல இருந்தாலும், அங்கு நீங்கள் செய்யும் service-ஐ இங்கே பதிவு செய்யலாம். இதனால் வேலை அல்லது service தேவைப்படும் போது, நம்ம ஊர்காரர்கள் உங்களை நேரடியாக reach ஆகலாம்.
3. Shops Directory-ல் பதிவு செய்யலாம்
உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர், உறவினர், தெரிந்தவருக்கோ கடை இருக்கிறதா? மளிகைக் கடை, ஆடைக் கடை, மருத்துவக் கடை, ஹோட்டல், Hardware Store, Electronics Shop, Jewelry Shop, பேக்கரி, நகைக் கடை... எந்த type shop ஆனாலும், Shop Directory-ல் பதிவு செய்யலாம். உலகின் எந்த country-ல இருந்தாலும், அங்குள்ள shop-ஐ இங்கே பதிவு செய்யலாம்.
4. Buy & Sell-ல் வாங்கலாம் & விற்கலாம்
நீங்கள் விற்க விரும்பும் பொருட்களையோ அல்லது உங்கள் நண்பர் விற்க விரும்பும் பொருட்களையோ இங்கே post செய்யலாம். Mobile, furniture, vehicle, electronics, household items போன்றவற்றை எந்த country-ல இருந்தாலும் விற்பதற்கோ வாங்குவதற்கோ பதிவு செய்யலாம். Interested buyer நேரடியாக உங்களை contact செய்து deal முடிக்கலாம்.
5. Rent & Real Estate-ல் பதிவு செய்யலாம்
உங்களிடமோ அல்லது உங்கள் நண்பரிடமோ Car, Bike இருந்தால் rent-க்கு விடலாம். House, Apartment, Room இருந்தால் Rent-க்கு பதிவு செய்யலாம். Land, Plot விற்க வேண்டுமானாலும், அதன் முழு விவரத்துடன் post செய்யலாம். நீங்கள் இருக்கும் country-ல உள்ள property-ஐ இங்கே பதிவு செய்யலாம். உலகம் முழுக்க இருக்கும் நம்ம ஊர்க்காரங்க உங்களை நேரடியாக contact செய்வார்கள்.
6. Job Seeker Profile உருவாக்கலாம்
நீங்கள் வேலை தேடுகிறீர்களானாலும், உங்கள் நண்பர் அல்லது உறவினர் வேலை தேடுகிறார்களானாலும் — அவர்களுக்காக Job Seeker profile உருவாக்கலாம். Qualification, Skills, Experience-உடன் Profile-ஐ நீங்கள் இருக்கும் country-க்கு ஏற்ப பதிவு செய்யலாம். Employers உங்கள் profile-ஐ பார்த்து நேரடியாக contact செய்யலாம்.
7. Job Vacancy Post செய்யலாம்
உங்கள் company-க்கு staff தேவைப்பட்டாலும், உங்கள் நண்பரின் company-க்கு staff தேவைப்பட்டாலும் Job details-ஐ post செய்யலாம். Qualification, experience, salary, வேலை இருக்கும் country, location போன்ற தகவல்களை தெளிவாக mention செய்யலாம். இதனால் நம்ம community-க்குள்ளேயே உலகம் முழுக்க வேலை வாய்ப்பு உருவாகும்.
8. Blood Donor-ஐ Search செய்யலாம் / Register செய்யலாம்
Blood Donor ஆக register செய்யலாம். அவசர நேரத்தில் blood தேவைப்பட்டால், Members Area-வில் Blood Groups அடிப்படையில் Donor-ஐ search செய்யலாம். Registered members-ஐ நேரடியாக contact செய்து உதவி பெறலாம். இது ஒரு life-saving feature.
9. Community News & Updates Share செய்யலாம்
நம்ம ஊருக்கான முக்கிய தகவல்கள், சமூக நிகழ்வுகள், கல்வி, மார்க்கம் சார்ந்த Announcements-ஐ share செய்யலாம். உலகின் எந்த country-ல இருந்தாலும், அங்கு நடக்கும் நம்ம ஊர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை இங்கே share செய்யலாம். நம்ம community-யை இணைத்து வைக்க இது உதவும்.
10. Online Store உருவாக்கலாம்
நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ online-ல் products sell செய்ய விரும்பினால், Adirai.in-ல் multiple vendor online shopping system உள்ளது. உங்கள் own online store-ஐ உருவாக்கலாம். நீங்கள் இருக்கும் country-ல இருந்தே உங்கள் products-ஐ upload செய்யலாம். Customers உங்கள் products-ஐ பார்த்து add to cart செய்து, Order Place செய்வார்கள். Worldwide shipping வசதியுடன் உங்கள் store-ஐ நிர்வகிக்கலாம்.
நம்ம சமூகத்திற்கான எங்கள் உறுதி (Our Promise to the Community)
பாதுகாப்பும் தனியுரிமையும் (Safety & Privacy)
பயனாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மை. WhatsApp OTP போன்ற சரிபார்ப்பு முறைகள் மூலம் உண்மையான பயனாளர்கள் மட்டுமே இணைவதை உறுதி செய்கிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக கையாளப்படும்.
தெளிவுத்தன்மை (Transparency)
இந்த தளத்தில் நடைபெறும் அனைத்து தொடர்புகளும் மற்றும் பரிவர்த்தனைகளும் பயனாளர்களுக்குள் நேரடியாக நடைபெறும் என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிடுகிறோம். நாங்கள் இணைப்பை ஏற்படுத்தும் மேடையாக செயல்படுகிறோம். எந்த பரிவர்த்தனையையும் மேற்கொள்வதற்கு முன், தேவையான சரிபார்ப்பை செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை ஊக்குவிக்கிறோம்.
நேர்மையும் ஒழுக்கமும் (Integrity)
தவறான தகவல் பரப்புதல், வெறுப்பு பேச்சு, மோசடி போன்றவற்றிற்கு எங்களிடம் கடுமையான விதிமுறைகள் உள்ளன. பரஸ்பர மரியாதையுடன், பயனுள்ள மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
நீண்டகால அர்ப்பணிப்பு (Long-Term Commitment)
இந்த தளம் இன்று மட்டும் அல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நம்ம பிள்ளைகளுக்காகவும், உலகம் முழுவதும் பரவி இருக்கும் நம்ம சமூகத்தை ஒன்றிணைக்கவும் இந்த முயற்சி தொடரும்.
ஆனா ஒரு முக்கியமான rule இருக்கு.
Speak good. Share good. Talk nicely.
யாரையும் குறை சொல்லாதீர்கள். நம்ம government-ஐ பற்றியும் negative-ஆ பேசாதீர்கள். Hate speech அனுமதி இல்லை. இந்த platform பெண்களும், குழந்தைகளும் பயன்படுத்தப் போகிறார்கள். அதனால் responsibility-யுடன் நடந்து கொள்ளுங்கள். Respect-ஆ பேசுங்கள். Positive-ஆ share செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு post-மும் உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் நம்ம ஊரை பிரதிபலிக்கிறது.
- நல்லதை செய்யுங்கள்.
- ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
- உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.